india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

நாடுதழுவிய போராட்டம் அறிவித்த காங்கிரஸ்!

கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலை மற்றும் வருவாய் இழப்பைச் சந் தித்துள்ள நிலையில், பெட்ரோல் - டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வரும், ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஜூன் 10 அன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

                                         ******************

பாரத் பயோடெக்கிற்கு மத்தியப் படை பாதுகாப்பு

ஹைதராபாத்திலுள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம்மற்றும் அந்நிறுவனத் தின் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு மையம்ஆகியவற்றுக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை (Central Industrial Security Force - CISF)பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்படி ஜூன் 14 முதல்துப்பாக்கி ஏந்திய 64 சிஐஎஸ்எப் வீரர்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

                                         ******************

இனி நானும் தடுப்பூசி  போட்டுக் கொள்வேன்!

கொரோனா தடுப்பூசியை பாஜக தடுப்பூசி, அதனைத் தான் போட்டுக் கொள்ள மாட்டேன் என்று உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் கூறியிருந் தார். தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒன்றியஅரசே இலவசமாக தடுப்பூசியை வழங்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இனிதானும் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார். ‘பாஜக தடுப்பூசிக்குத்தான் நாங்கள் எதிர்ப்பு. இந்திய அரசின் தடுப்பூசிக்கு அல்ல’ என்று அவர் கூறியுள்ளார்.

                                         ******************

பற்றாக்குறை இல்லையென்ற ஹர்ஷ வர்தன் எங்கே?

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க, ஒரு மாதத் துக்கு 23 கோடி தடுப் பூசிகளை உற்பத்தி செய்ய வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஜூன் 2 முதல் தடுப்பூசி போட முடியவில்லை. ஆனால்,‘தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது’என்று நாள்தோறும் மார்தட்டிய ஒன்றியசுகாதாரத்துறை அமைச்சரை (ஹர்ஷவர்தன்) சில நாட்களாகக் காணவில்லைஎன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

                                         ******************

போலி சாதிச் சான்றிதழ்:  பெண் எம்.பி.,க்கு அபராதம்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை நவ்னீத் கவுர் (35). மகாராஷ்டிராவிலுள்ள அமராவதி மக்களவை தனித் தொகுதியில் 2019 தேர் தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், ‘லபானா’ என்ற சாதியைச் சேர்ந்த நவ்னீத் கவுர், ‘மோச்சி’ சாதிப்பிரிவின் பெயரில் போலிச் சான்றிதழ் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு தற்போது ரூ. 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சான்றிதழையும் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.

;