india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

100 பேர் உயிரிழந்த சம்பவம்:  பாஜக பிரமுகர் கைது!

உ.பி. மாநிலம் அலிகாரில் கள்ளச் சாராயம் குடித்து 100-க்கும் மேற்பட்டோர் இறந்துபோன வழக்கில், பாஜக பிரமுகரான ரிஷி சர்மாவை போலீசார் தேடி வந்தனர். அவரைப் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ. 1 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்ட எல்லையில் ரிஷி சர்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது மனைவி, மகனும்ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                               ****************

சினிமா படப்பிடிப்புக்கு மும்பையில் அனுமதி!

மும்பையில் கொரோனா பாதிப்புகட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் படப் பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படும் என்றுமகாராஷ்டிர முதல்வர்உத்தவ் தாக்கரே, சினிமா துறையினருக்கு உறுதி அளித்துள்ளார். சினிமா, டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கொரோனா பாதுகாப்பு விதிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை படப்பிடிப்பின் போது பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

                                               ****************

தடுப்பூசி போஸ்டர்களில் ஜொலிக்கும் பாஜகவினர்!

‘900 ரூபாய்க்கு தடுப்பூசிகளை டோஸ் களை விற்று, கர்நாடகத்தில் நெருக்கடியான நேரத்திலும், பாஜகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர். மறுபுறத்தில், தங்களின்புகைப்படங்களை போட்டு போஸ்டர் களில் அவர்கள் ஜொலிக்கின்றனர். என்னசெய்தாலும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன என்பது மட்டும் உண்மை’ என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவக் குமார் குறிப்பிட்டுள்ளார்.

                                               ****************

விசாரணைக்கு தயார்:  சோக்சி வாக்குமூலம்!

‘இந்தியாவில் நான் இருந்த வரையில், எனக்கு எதிராக எந்த புலனாய்வு அமைப்பும் வாரண்ட் பிறப்பிக்கவில்லை. எனது மருத்துவ சிகிச்சைக்காகவே நாட்டைவிட்டு வெளியேறினேன். மற்றபடி, இந்திய அதிகாரிகளின் விசாரணையை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் கிடையாது. இப் போதுகூட, விசாரணைக்கு தயாராக உள்ளேன்’ என்று வைர வியாபாரி மெகுல் சோக்சி டொமினிகன் நீதிமன் றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

                                               ****************

பாஜகவினருக்கு கடைகளில் பொருட்கள் வழங்கத் தடை?

மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டம் மகிஷ்டா என்ற பகுதியில், ‘‘பாஜக நிர்வாகிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். கடை களில் அவர்களுக்கு பொருட்களை விற் பனை செய்யக் கூடாது. டீக்கடைகளில் டீ கூட கொடுக்கக் கூடாது. மீறினால் கடும்அபராதம் விதிக்கப்படும்’’ என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்ததேர்தலில் பாஜக இங்கு அதிகவாக்குகளை பெற்றிருந்த நிலையில், மம்தாகட்சியினர் இந்த மிரட்டலை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

;