india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

சிரோமணி அகாலிதளம் பிஎஸ்பி தொகுதிப் பங்கீடு!

2022-இல் நடைபெறும் பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் சதீஸ் மிஸ்ரா- அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சந்திப்பைத் தொடர்ந்து, இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் மொத்தமுள்ள 117 இடங்களில் பகுஜன் 20 இடங்களிலும், அகாலி தளம் 97 இடங்களிலும் போட்டியிடும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

                                     *******************

போலி மாட்டுச்சாண  பெயிண்ட்டிற்கு தடை!

பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘காதி’நிறுவனத்தின் பெயிண்டை, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கடந்த 2021 ஜனவரியில் அறிமுகம் செய்தார். இதனை பூசினால், பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் ஏற்படாது என்று அவர் கூறினார். இதனிடையே, காசியாபாத்தைச் சேர்ந்த ஜேபிஎம்ஆர் என்ற நிறுவனம் ‘காதி பிரக்ரிதிக் பெயிண்ட்’ பெயரில் போலி பெயிண்ட் தயாரித்து விற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதற்குதில்லி உயர் நீதிமன்றம் தடை விதித் துள்ளது.

                                     *******************

பாஜகவில் யாரும்  நீடிக்க மாட்டார்கள்!

பாஜக தேசியத் துணைத் தலைவர் முகுல் ராய், வெள்ளிக் கிழமையன்று தனது மகன் சுப்ரான்ஷூவுடன் மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கே திரும்பினார். பின்னர்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தஅவர், “எங்கு இருந்தேனோ அங்கேயேமீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; இனி பாஜக உடன் எந்த உறவும் இல்லை” என்று தெரிவித்தார். மேலும், “தற்போதைய சூழலில், பாஜகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                     *******************

தேர்தலையொட்டி புதிய திட்டங்கள்: மோடி முடிவு?

ஒன்றிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து, உள் துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் வெள்ளிக்கிழமையன்று சுமார் 5 மணிநேரம் ஆய்வு நடத்திய பிரதமர் நரேந்திரமோடி, விரைவில் அமைச்சரவையை விரிவுபடுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதேபோல, அடுத்துவரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி சமூகநலத் திட்டங்களையும் அவர் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

                                     *******************

சரத்பவாருடன் 3 மணிநேரம் பிரசாந்த் கிஷோர் பேச்சு

அரசியல் ஆலோசகர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரசாந்த் கிஷோர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரைச் சந் தித்துப் பேசியுள்ளார். சுமார் 3 மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில், 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

;