india

img

பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு விருப்ப ஓய்வு திட்டம்?

புதுதில்லி:
பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஏர்-இந்தியாவில் ஊழியர்களுக்கு சிறப்பு விருப்ப ஓய்வு திட்டத்தை விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என்று நிதி யமைச்சக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நிதி ஆயோக்கின் பரிந்துரைகளை ஏற்று சிறப்பு விருப்ப ஓய்வு திட்டம்கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளில் விருப்ப ஓய்வுதிட்டம் கொண்டு வரும்ஆலோசனை இருந்தது. அதே போல் இந்த திட்டத்தைஏர்-இந்தியா மற்றும் காப்பீட்டு நிறுவனத்திலும் அமல்படுத்த நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. கவர்ச்சிகரமாக விருப்ப ஓய்வு திட்டம் மூலம் வங்கிகளை தனியார் துறையினர் கையகப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.
வி.ஆர்.எஸ். மூலம் பணியாளர்களை வலுக்கட்டாய மாக வெளியேற்றும் எண்ணம் இல்லை. ஓய்வு பெற விரும்பும் ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் அவர்கள் கவர்ச்சிகரமான நிதி தொகுப்பைபெற முடியும் என்று தெரிவித்தார்.வங்கிகளை தனியார் களுக்கு தாரைவார்த்து வரும் மோடி அரசு,அதற்கு உதவியாக இந்த சிறப்பு விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டுவரப்போவதாக கூறப்படுகிறது.

;