india

img

ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை.... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.....

புதுதில்லி:
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நாடு முழுவதும் வழக்கம் போல் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

2003 ஆம் ஆண்டு முதல் தென்மேற்கு பருவ மழைக்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நீண்டகால முன்னறிவிப்பை இரண்டு கட்டங்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.கடல் பரப்பின் நிலவரங்களை இந்திய வானிலை ஆய்வுமையம் கவனமாக கண்காணித்து வருகிறது. 1961 முதல் 2010 வரையிலான நாட்டின் நீண்டகால சராசரி பருவகால மழையின்அளவு 88 சென்டிமீட்டர் ஆகும்.ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழையின் அளவு நீண்ட கால சராசரியான 98 சதவீதமாக இருக்கும் (5 சதவீதம் கூடுதல் அல்லது குறைவாக) என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் முதல்செப்டம்பர் வரை நாடு முழுவதும் வழக்கம் போல் பெய்யும். நீண்டகால சராசரியின் 96 முதல் 104 சதவீதம் வரை இருக்கும். 2021 மே மாதத்தின் கடைசி வாரத்தில் புதிய வானிலைமுன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடும். ஏப்ரலில் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புக்கு கூடுதலாக, நான்கு மண்டலங்களுக்கான, மழை காலத்திற்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) முன்னறிவிப்பு மற்றும் ஜூன்மாதத்திற்கான முன்னறிவிப்பும் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;