india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

                                     ****************

தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர்ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

                                     ****************

இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்தஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டு கடற்படையில் இணைக்கப் படும் என்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

                                     ****************

வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட ‘எச் - 1பி விசா” விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

;