india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதால்,  24 ஆவது இந்தியத் தலைமைத் தேர்தல்ஆணையராக சுசில் சந்திரா பதவியேற்றுக்கொண்டார். இவர் 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றுவார்.

                                     ************

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் 45 வயதுக்கு மேற்பட்ட 6,000 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது.

                                     ************

இந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5  என்ற கொரோனாதடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ள நிலையில், 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                     ************

கொரோனா தொற்று அதிகரித்ததையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தோடு மும்பையை விட்டு வெளியேறி வருகின்றனர். 

                                     ************

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

                                     ************

காரைக்கால் தெற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிமுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                     ************

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  98.11 அடியாக குயைந்துள்ளது.  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.00 அடியாக உள்ளது.

                                     ************

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                     ************

அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

                                     ************

காவல்துறையில் புதிதாக 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

                                     ************

தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

                                     ************

14 ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.58-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.88-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

                                     ************

நகைச்சுவை நடிகர் செந்தில்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                     ************

மங்களகரமான நாட்களில் பதிவுசெய்யப்படும் ஆவணங் களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என பதிவுத்துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார். சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.

                                     ************

ரபேல் போர் விமான முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான மனுமீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2 வாரங்கள் கழித்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                     ************

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணை யில் மின்சார ரெயில்கள் இயங்கும்என்று தெற்கு ரயில்வே அறிவித்துள் ளது.

                                     ************

ஊட்டியில் குதிரை பந்தயம் இன்று தொடங்குகிறது. இந்த குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

                                     ************

தமிழகத்தில் முகக் கவசம் அணி யாதவர்கள் மீது 4 நாட்களில்1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களிட மிருந்து ரூ.2.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

;