india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மத்திய அரசு மதிக்கிறது, மத்திய அரசு தெரிவித்துள்ள எந்த நடவடிக்கையும், வாட்ஸ் ஆப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.ஒரு குறிப்பிட்ட செய்தியை முதலில் பதிவிட்டவர் யார் என்பதை வாட்ஸ் ஆப் தெரிவிக்க கோருவது உரிமையை மீறுவதாகாது என்று கூறியுள்ளார். 

                                                    ################

தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG கொரோனா மருந்து சந்தையில் மே 27  முதல் விற்பனை செய்யப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

                                                    ################

நோபல் பரிசு பெற்ற இந்தியபொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுக்கு ஸ்பெயின் நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                    ################

இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடியில் தப்பி ஓடிய மெகுல் சோக்சி வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தார். தற்போது  டொமினிக்கன் நாட்டில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

                                                    ################

கனடாவின் விமான நிறுவனங்கள் பெலாரஸ் நாட்டின் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என்று கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.

                                                    ################

ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

                                                    ################

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் உள்பட 12 எக்ஸ்பிரஸ்ரயில்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

                                                    ################

ஜூலை 3-ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

                                                    ################

பான் மசாலா, குட்கா, செங்கல் சூளை போன்ற வரி ஏய்ப்பு செய்து வரும் துறைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்து வருகிறது.

;