india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் ஒடிசா-மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் இன்று நண்பகல் அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

                                  ******************

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் அதிபர், பிரதமர்மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.

                                  ******************

விமானம் வழிமறித்து தரையிறக்கப்பட்ட விவகாரத்தில் பெலாரஸ் நாடு மீது புதிய தடைகளைவிதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்அளித்துள்ளது.

                                  ******************

பயணிகள் வரத்து குறைவினால் சென்னை எழும்பூர்-திருச்சி, மதுரை உள்பட 6 சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

                                  ******************

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா,உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் உள்பட 17 நாடுகளை சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

                                  ******************

ஒருங்கிணைந்த நான்கு ஆண்டுகால பி.எட். படிப்பு தற்காலிகமாகநிறுத்தப்படுவதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) தெரிவித்துள்ளது.

                                  ******************

திருக்கோயில்கள் தொடர்பான கோரிக்கைகள், புகார்களைப் பதிவிட இணையதளத்தில் தனி வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

                                  ******************

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

                                  ******************

தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை சந்தைப்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்அதுகுறித்து வேளாண் அதிகாரிகளை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

;