india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக் கிழமை)  தொடக்கி வைக்கிறார்.

                                   ***************

தமிழகத்தில் புதிய அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

                                   ***************

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு 33,059-ஆக பதிவானதை சுட்டிக்க்காட்டி மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

                                   ***************

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி எடுத்தோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 3 மாதத்திற்கு பின் அடுத்தடோஸ் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                                   ***************

5ஜி தொழிநுட்பத்துக்கும், கொரோனா பரவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தொலைத்தொட ர்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழில்நுட்ப சோதனை தொடர்பாக பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என்று தெரிவித்துள்ளது.

+++++++++++++++

பி.எம்.கேர் நிதியில் வழங்கிய 243 வெண்டிலேட்டர்கள் பழுது....  விசாரணை நடத்த கோரிக்கை

புதுதில்லி:

பி.எம்.கேர் நிதியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் இயங்காதது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் பி.எம்.கேர் நிதியில் இருந்து மாநிலங்களுக்கு பல மருத்துவ உபகர ணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்களில் சுமார் 250 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்று புகார் எழுந்துள்ளது. 
மகாராஷ்டிரா மாநி லத்திற்கு பி.எம்.கேர் நிதியில் இருந்து முதற்கட்டமாக 262 வெண்டிலேட்டர்கள், இரண்டாவது கட்டமாக 590 வெண்டிலேட்டர்கள் என 1352 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன.இதில்  862 வெண்டிலேட்டர்கள் மட்டுமே செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 243 வெண்டிலேட்டர்கள் பயன்படுத்த முடியாதவை என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. வெண்டி லேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்து ள்ளதாகவும், மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களின் உயிரோடு விளை யாடுவதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. 

;