india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு தில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஐ.என்.எக்ஸ்  மீடியா வழக்கு தொடர்பான ஆவணங்களை தர சிபிஐ-க்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                                **************** 

கொரோனா மருத்துவ வழிகாட்டுதல்களில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறையை மத்திய அரசு நீக்கியது. பிளாஸ்மாசிகிச்சை முறை எதிர்பார்த்த பலனைஅளிக்காததால் மருத்துவ வழிகாட்டுதலில் இருந்து நீக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

                                                **************** 

தமிழகத்தில் போக்குவரத்து வாகனவரி செலுத்த வரும் ஜூன் 30-ஆம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

                                                **************** 

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

                                                **************** 

பயணிகள் வரத்து குறைந்ததால் திருச்சி-இராமேசுவரம், கோவை-நாகர்கோவில் உள்ளிட்ட ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

                                                **************** 

பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அவற்றை பதுக்குபவர் களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

                                                **************** 

தெற்காசிய நாடுகள் குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் பிரபலங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாலத்தீவு அரசு தடை விதித்துள்ளது.

;