india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

பத்திரப்பதிவு அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பை விட பத்திரப்பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என பதிவுத்துறை தலைவர் அனைத்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

                           ****************

ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மும்பை சிறப்புநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி, பொருளாதார தலைமறைவு குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் சொத்துகளை பறிமுதல் செய்வது குறித்து நோட்டீசும் அனுப்பினார்.

                           ****************

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாள ராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம்   அறிவித்தது.

                           ****************

செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2021 பிப்ரவரி இறுதி நிலவரப்படி 116.77 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

;