india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்.....

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் யோசனை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

                              **************

டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்கலாம் என்று வேளாண் வல்லுநர் குழு பேரவை பரிந்துரை செய்துள்ளது.

                              **************

ஐ.சி.சி. விருது பட்டியலில் இடம்பெறும் 3 வீரர்கள், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவரைமுன்னாள் வீரர், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். கடந்த மாதத்துக்கான (ஏப்ரல்) சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                              **************

உச்சநீதிமன்றம் நியமித்துள்ள தேசிய நிபுணர் குழு பரிந்துரைகளை அளிக்கும் வரை தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், மருந்து சப்ளைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                              **************

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் நிவாரணப் பொருட்களுக்கு ஐ.ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

                              **************

புதிய தனிநபர் கொள்கையை ஏற்காவிட்டால், கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்படும் என பயனர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

                              **************

தமிழகத்தில் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள தாக போக்குவரத்துக்கழகம் தெரி வித்துள்ளது.

;