india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ நுழைவுதேர்வுகள் ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது. புதிய அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

                               ****************

ஆன்லைன் வழிக் கல்வியால் மின்சாரம், வாகனம் எனபல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளது. எனவே தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                               ****************

செங்கல்பட்டு அருகே 105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தவர்கள் மீதுதுறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவறுதலாக பட்டா வழங்கப்பட்டதாக அரசு
தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது என்று  நீதிபதிகள்  தெரிவித்துள்ளனர்.

                               ****************

ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

                               ****************

பீகாரில் வரும் மே 15 -ம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

                               ****************

தில்லியில் கட்டப்பட்டு வரும் புதியநாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரின் புதிய இல்லத்துக்கான கட்டுமானப் பணிகள் 2022ம் ஆண்டு இறுதிக்குள் தயாராகும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவும் காலத்தில் இது தேவையா? என எதிர்க்
கட்சிகள்  விமர்சித்து வருகின்றன.

                               ****************

நாடு முழுவதும் 20 ஆக்சிஜன்ரயில்கள் மூலம் இதுவரைஆயிரத்து 125 மெட்ரிக் டன் திரவஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                               ****************

நாகர்கோவில்-பெங்களூரு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

                               ****************

இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவராக சபீர் பெர்மன் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் முதல்திருநங்கை நடுவர் ஆவார்.

                               ****************

மாநிலங்களுக்கு வழங்கப் படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

;