india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

தில்லி அருகே வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேலான கட்டடங்களை இடித்துத்தள்ள உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

                                                 ***************

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களை பின்பற்ற கால அவகாசம் அளிக்கும்படி, சமூக வலைதளமான டிவிட்டர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

                                                 ***************

இந்திய கடற்படைக்காக மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 3 இலகு ரக ஹெலிகாப்டர்கள் கடற்படையின் கிழக்கு பிராந்திய குழுமத்தில் சேர்க்கப்பட்டன.

                                                 ***************

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டார்.

                                                 ***************

பொதுமக்கள் புகார் கொடுக்கபோலீஸ் நிலையம் செல்வதை தடுக்க வாட்ஸ்-அப் மூலம் புகார் கொடுக்கும் வசதி கோவை மாவட்ட காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

                                                 ***************

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூலை 13 ஆம் தேதி தொடங்குகிறது.

                                                 ***************

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு பிரச்சனை, ஓ.பி.சி. இட ஒதுக்கீடு, டவ்தே புயல் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்குவது, ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை ஜூன் 8 செவ்வாய்க்கிழமையன்று சந்தித்துப் பேசினார்.

;