india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்..

நாடு முழுவதும் கொரோனாவால் 1,700 குழந்தைகள் தங்களதுபெற்றோர்களை இழந்துள்ளனர் என்று தேசிய குழந்தைகள் உரிமைபாதுகாப்பு ஆணையம் உச்சநீதி மன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இக்குழந்தைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாநில அரசுகள், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

                                      *******************

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் மத்திய கல்வித்துறை  அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                      *******************

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, இந்தியாவுக்கான குறைதீர்ப்பு அதிகாரியாக பரேஷ் பி.லால் என்பவரை வாட்ஸ் அப் நிறுவனம் நியமித்துள்ளது.

                                      *******************

ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                      *******************

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக் கான 91 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் வாசிலி லிவிட்டை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

                                      *******************

இந்திய பாதுகாப்புத் துறைக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மேலும் 108 ராணுவ தளவாடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

                                      *******************

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இணையவழியில் நடைபெற்ற தேர்வு முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளி யிட்டுள்ளது.

                                      *******************

மாதாந்திர ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்கான காலக்கெடுஜூன் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. 

                                      *******************

ஜூலை மாத பாதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போது மான அளவு டோஸ்கள் கிடைக்கும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

                                      *******************

மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பம்லானிவிமாப் 700 மி.கி., எட்டெசிவிமாப் 1400 மி.கி.மருந்துகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய  மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. 

                                      *******************

ஐரோப்பிய நாட்டு தலைவர்களை உளவு பார்த்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அமெரிக்காவை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

;