india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டாவது சிறப்பு மையத்தினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  திறந்து வைத்தார். 

                                                ****************

ஜூன் 10ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை  அமல்படுத்த, மண்டல ஊரடங்கு அமலாக்கக் குழுக்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 45-ஆக உயர்த்தி  சென்னை மாநகராட்சி  செயல்படுத்தவுள்ளது. 

                                                ****************

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி “ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.

                                                ****************

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் டயர் வெடித்து மரத்தில் மோதியதில், பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

                                                ****************

சிறு, குறு தொழில் முனைவோர், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கைவினை பொருட்களை எவ்வித கட்டணமும் இன்றி சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக http://takecareinternational.org என்ற இணையதளத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

                                                ****************

சென்னை, அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டு கூட்டத்தில் மீன் வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

                                                ****************

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ், இதுவரை 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

                                                ****************

மாநிலத்தில் அடுத்த ஓராண்டிற்குள் ஆயிரம் குறுங்காடுகள் அமைத்து பராமரிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

                                                ****************

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் இதற்கான டோக்கன் ஜூன் 11 முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

                                                ****************

உலக அளவில் கடந்த 4 ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரித்திருப்பதாக, சர்வதேச தொழிலாளர் நிறுவனமும், யுனிசெஃப் அமைப்பும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

                                                ****************

1998 பேங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங், கல்லீரல் புற்றுநோயால் காலமானார். இவர் அர்ஜுனா விருதும், பதம்ஸ்ரீ விருதும்பெற்றுள்ளார்.

                                                ****************

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றோர் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷங்க் தெரிவித்துள்ளார்.

                                                ****************

இந்திய-ஜெர்மனி 70 ஆண்டு தூதரக உறவுகளை போற்றும்வகையில், இந்திய  அஞ்சல் துறையால்  வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல்தலையை, இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வி சிருங்கா, இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜெ லிண்ட்னர் ஆகியோர் வெளியிட்டனர்.

                                                ****************

இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்த்து போரிடுவதில் கத்தார் துணை நின்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கத்தாரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது பின் அகமது அல் மெஸ்னேதை சந்தித்தார்.

                                                ****************

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று ஒன்றிய பொதுசுகாதார சேவைகள் இயக்குநரகம் கூறியுள்ளது. பெற்றோர், மருத்துவர் கண்காணிப்பில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள சிறுவர்கள் முகக்கவசம் அணியலாம் என கூறப்பட்டுள்ளது.

                                                ****************

உலகின் முதல் நாடாக எல் சால்வடாரில் இணையதள பணமான பிட்காயினை அதிகாரப்பூர்வ பணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                ****************

சட்டத்தின் கண்முன் எல்லோரும் சமம் எனவும் ஏழை, பணக்காரன், சாதி, மதம் என குற்றம்சாட்டப்பட்ட வருக்கு எதைக் கொண்டும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படமாட்டாது என்றும் தில்லி நீதிமன்றம் கருத்து தெரி வித்துள்ளது.

                                                ****************

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்து, நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்க வேண்டும் எனபல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

                                                ****************

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து சீன நிறுவனத்தை நீக்கி இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

                                                ****************

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக மால்வானியில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம்இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                                ****************

போலந்து ஓபன் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவி தஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

;