india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஜூலை 20ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

                              *****************

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தென்மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட 15 ரயில் நிலையங்களில் 8 கோடி ரூபாய் மதிப்பில் 340 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணிகள் முடிந்துள்ளன.

                              *****************

உலகின் மிகப்பெரிய மணல் சிற்பமாக மாளிகை ஒன்று டென்மார்க் நாட்டின் புளோக்குஸ் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

                              *****************

அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களைநிதித்துறை கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. கனரக தொழில்கள் துறையின் கீழ் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் இனி நிதித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும். அரசுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்று நிதி திரட்ட ஏதுவாக அவை நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

                              *****************

தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

                              *****************

காட்பாடி யார்டில் ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், விரைவு ரயில் சேவையில் ஜூலை 8, 10 ஆகிய தேதிகளில் மாற்றம்செய்யப்படவுள்ளது.

                              *****************

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021-2022ஆம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

;