india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

குவைத்தில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுக்கு கூடுதல் சட்ட பாதுகாப்பு வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. 

                                       ***************

தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த 3 நாட்களில் மாநிலங்களுக்கு 38 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இதுவரை 25.60 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 

                                       ***************

மருத்துவ மேற்படிப்புக்கான இனிசெட் நுழைவு தேர்வை குறைந்தது ஒரு மாதமாவது ஒத்திவைக்குமாறு எய்ம்ஸ் நிர்வாகத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட ஒன்றிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.ஜி.படிப்புகளுக்கு இனிசெட் தேர்வு நடத்தப்படுகிறது.

                                       ***************

யூரோ2020  கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை, 11 நகரங்களில் நடைபெறுகின்றன. மொத்தம் 51 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஆட்டத்தில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் மோதின.

                                       ***************

கொரோனா பாதிப்பில் இருந்து இணை நோய்களால் மரணமடைந்தவர்களுக்கு வழங்கிய இறப்பு சான்றிதழ்களை  நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

                                       ***************

நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15 தனியார் ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

                                       ***************

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கங்கை சமவெளிக்கு அப்பால், வட மேற்கு வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

                                       ***************

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் சுமார் 25.60 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

                                       ***************

இந்த ஆண்டு இறுதியில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் மலைக்கோவிலுக்கு ரோப்கார் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

                                       ***************

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் உடல்நிலையை கண்காணிக்க 5 மல்டி பாராமீட்டர் நன்கொடையாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. மாநில சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், இந்த உபகரணங்களை மருத்துவர்களிடம் வழங்கினார். 

                                       ***************

தமிழகத்தில், முகக் கவசம் அணியாததற்காக கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் இதுவரை சுமார் 13 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.

                                       ***************

ஊராட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்த  பணியாளர்கள், தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தில்  இணைக்கப்படுவார்கள் என்றுமத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் கூறியுள்ளார்.

                                       ***************

ஹஜ் புனிதப் பயணம் தொடர்பாக சவூதி  அரேபிய அரசின் முடிவின்படி மத்திய அரசு செயல்படும் என்று மத்திய சிறுபான்மையினர்  நலத்துறை அமைச்சர்  முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

                                       ***************

கோவிட் தடுப்பூசிக்காக மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் உள்ள தகவல்கள் திருடப்பட்டதாக வரும் செய்திகளை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இத்தகவல்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன என்று  அமைச்சகத்தின் தடுப்பூசி நிர்வாகக்குழு தலைவர் ஆர். எஸ். சர்மா கூறியுள்ளார்.

                                       ***************

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் அடுத்தமாதம் முதல் வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

                                       ***************

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சையை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

                                       ***************

நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் தற்காலிக, ஒப்பந்த பணியாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி அளிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

                                       ***************

புதிய அச்சிடப்பட்ட அமீரக அடையாள அட்டைக்கு காத்திருப்பவர்கள் மின்னணு முறையில் செல்போனில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

                                       ***************

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வு (நேர்முகத் தேர்வு) ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக ஒன்றிய  பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

;