india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு ஜூலை 27 செவ்வாய்க்கிழமையன்று  இராமேஸ்வரம் அருகே பேய்கரும்பி லுள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பல்வேறு தரப்பினர்  மலரஞ்சலி செலுத்தினர்.

                         *************

அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு ஆசிரியர்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

                         *************

தமிழகத்திற்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளை ஒன்றியஅரசிடமிருந்து கேட்டுப் பெற்று வருவதாகவும், ஆக்சிஜன் உற்பத்தி தேவையான அளவுக்கு இருப்பதாகவும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

                         *************

தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டத்தில் முதலீடு செய்ய தனியார் துறையினர் அதிக ஆர்வம் காட்டுவதாக பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார்.

                         *************

கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு எம்.ஆர். கிருஷ்ண மூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 15 மெகாவாட் மின்உற்பத்தி நிலையம் விரைவில் அமைக்கப்பட வுள்ளதாக மாநில வேளாண்-உழவர்நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

                         *************

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும்மழை காரணமாக  மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.  

                         *************

இராமேஸ்வரத்தில் இந்திய சுற்றுலா துறையின் பிரசாத் திட்டத்தின் கீழ், ஐம்பது கோடி ரூபாய்மதிப்பீட்டில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று மாநில சுற்றுலாத் துறைச் செயலாளர் சந்திரமோகன் கூறியுள்ளார்.

                         *************

அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பி.எட். கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                         *************

சத்தீஸ்கர் மாநிலத்தில் நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த நக்சலைட் குழுவின் தலைவர்  டைகர்ஹூங்காவை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

                         *************

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனம் - ஹட்கோ தனது இருப்பு பங்குகளை நிறுவன பங்குதாரர்களுக்கு விற்பனை செய்யும் பணியை செவ்வாயன்று தொடங்கியுள்ளது. 

                         *************

மைசூர் பருப்பிற்கான இறக்குமதி வரி‍ பூஜ்யம் சதவீதமாகவும்,   வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு  தீர்வை தற்போதைய இருபது சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

                         *************

சர்வதேச அளவில் திறன் வாய்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையிலும்  இந்தியா மற்றும் உலகளாவிய தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும்  அனிமேசன், காட்சி அமைப்பு, விளையாட்டு மற்றும் காமிக்ஸ் தொழில்நுட்பங்களுக்கான தேசிய உயர் சிறப்பு மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர்  அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

                         *************

நாடு முழுவதும் கொரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட வர்களின் எண்ணிக்கை  44 கோடியைக் கடந்துள்ளது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில், 2 கோடியே 14 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

                         *************

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ தேசிய அளவிலான உதவி எண்ணை ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.

                         *************

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவர் என்று இங்கிலாந்து நீதிமன்றம் அறிவித்து ள்ளது.

;