india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

 பெண்களின் துன்பம் பற்றி எப்போது பேசுவோம்?

உஜ்வாலா யோஜனா திட்ட சிலிண்டர்களுக்கு ஒன்றிய அரசு மானியம் வழங்காதது குறித்து, ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். இந் நிலையில், “சமையல் எரிவாயு உருளை விலைகள் தொடர்ந்து உயர்கின்றன. சிலிண்டரை நிரப்ப பணம் இல்லை. கொரோனா பொதுமுடக்கத்தால் வணிகம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டிலுள்ளபெண்களின் துன்பம் மற்றும் அவர்களின்வலியைப் பற்றி எப்போது பேசுவோம்?”என மீண்டும் டுவிட்டரில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

                              *************

சமஸ்கிருதத்தை  பிரபலமாக்க வேண்டும்!

உலக சமஸ்கிருதத் தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுடுவிட்டரில் பதிவுஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், “சமஸ் கிருத மொழியின் பல உச்சரிப்புகள் இசைக்குரியது என்று சுவாமி விவேகானந்தா் கூறியுள்ளார். இந்தியாவின் மிகவும் தொன்மையான செம்மொழியான சமஸ்கிருதம் நாட்டில்இப்போது பேசப்படும் பல மொழிகளுக்குத் தாயாகவும் உள்ளது. அந்த மொழியை நாம் மீட்டெடுத்து பிரபலமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்..

                              *************

காஷ்மீர் ஒன்றிணைய  நிரந்தரத் தடை பாஜக!

“அரசியல் அமைப் புக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் காஷ்மீரின் அடையாளங்களை அழிப்பதை மோடி அரசு நிறுத்த வேண்டும். எங்களிடமிருந்து திருடியதை தர வேண்டும். மீண்டும் மாநில அந்தஸ்து தர வேண்டும்.சிறப்பு அந்தஸ்தையும் உறுதிசெய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானில் நடப்பதைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். “பாஜக இருக்கும் வரை ஜம்மு - காஷ்மீர், தேசத்துடன் ஒன்றிணைய முடியாது” என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

                              *************

சித்துவின் ஆலோசகருக்கு அம்ரீந்தர் சிங் கண்டனம்!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவின் ஆலோசகர்களில் ஒருவராக இருப்பவர் மல்வீந்தர் சிங். இவர், கடந்தவாரம் அளித்த பேட்டியில், “காஷ்மீர் சுதந்திரமான நாடு என்றும் அதைஇந்தியாவும் பாகிஸ்தானும் ஆக்கிரமித்துள்ளன” என்றும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘’காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி. அதை தனிநாடு என்று கூறுவது தேச விரோதம்” என்று கண்டித்துள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், “சித்து தனது ஆலோசகர்களை அடக்கி வைக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

                              *************

இடைத்தேர்தலை நடத்த மம்தா கோரிக்கை!

மேற்குவங்க சட்டப்பேரவையில் காலியாக இருக்கும் இடத்திற்கு உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அம்மாநிலமுதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது எம்எல்ஏ-வாகஇல்லாத மம்தா பானர்ஜி, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே முதல்வராக தொடர முடியும் என்ற நிலையில், இந்த கோரிக்கையை அவர் எழுப்பியுள்ளார். 

;