india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இறுதி அறிக்கை சமர்பிக்கவேண்டும்; இனி கால நீட்டிப்பு இல்லை என்று நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒரு நபர் ஆணைத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

                                         ****************** 

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும்சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படு கிறது. இதற்கு  மணல் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

                                         ****************** 

பகுதி நேர பி.இ, பி.டெக். படிப்புகளுக்கு செப்டம்பர் 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

                                         ****************** 

மகப்பேறு விடுப்பு வழங்கும் போது பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைபடுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே எந்த பாகுபாடும் காட்டக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                         ****************** 

கென்யா நாட்டின் நைரோபியில் நடைபெறும் இளையோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீராங்கனை ஷைலி சிங்  இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

                                         ****************** 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக் கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இம்மாதம் 23 ஆம் தேதி முதல் மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து ள்ளது. 

                                         ****************** 

வீட்டுவசதி துறையில் விற்பனை  செய்யப்பட்டவர்களுக்கான விற்பனை பத்திரத்தை அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என மாநில வீட்டுவசதி-நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள் ளார்.

                                         ****************** 

இந்திய புவியியல் பற்றிய தகவல்களை டிஜிட்டல் முறையில் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

                                         ****************** 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்காக  ஐந்து ஆம்புலன்ஸ் சேவைகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

                                         ****************** 

ஆப்கானிஸ்தான் முகநூல் பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயலியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள் ளது. 

                                         ****************** 

மின் பகிர்மான நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாத சூழலில், மின்சாரத்தை மூன்றாம் தரப்புக்கு விற்பனை செய்ய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வரைவு விதிகளை ஒன்றிய  அரசு வெளியிட்டுள்ளது.

;