india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்..

பொள்ளாச்சி பாலியல் கும்பல் வழக்கை விரைந்து முடிக்க சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை உறுதியளித்துள்ளது.

                                 ************

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்; 4049 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

                                 ************

தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நான்கு புதிய அறிவியல் மைய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டதாக  ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

                                 ************

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார்.

                                 ************

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், மின்சார வாகனங்களின் உற்பத்தி திட்டத்திற்காக இதுவரை 756 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது.

                                 ************

வாடிக்கையாளர்களின் சேமிப்புகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் சிம் பைண்டிங் எனப்படும் புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியுள்ளது.

                                 ************

தேர்வு மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள விரும்பும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல், அடுத்த மாதம் 15-ஆம் தேதிவரை நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

                                 ************

ஐ.நா. பாதுகாப்பு சபை ஆகஸ்ட் 9 அன்று ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் சார் பாதுகாப்பு குறித்த திறந்தவெளி விவாதத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

                                 ************

இந்திய ரயில்வே கடந்த ஜூலை மாதம் மிக அதிக அளவிலான சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

                                 ************

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் வேலூர் மாவட்டத்தில்  உள்ள கஸ்பா நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒன்றிய  அரசின் காயகல்ப் விருது வழங்கப்பட்டுள்ளது. 

                                 ************

இருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்தஎவ்விதமான பரிந்துரையும் வழங்கவில்லை என்று  மாநிலங்களவையில் ஒன்றிய சுகாதாரத்துறை எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவோ, தேசிய நிபுணர்கள் குழுவோ பரிந்துரை வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                 ************

செல்போன் ஒட்டுக்கேட்பு குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில்  இந்திய எடிட்டர்ஸ் கில்டு என்ற அமைப்பு மனுதாக்கல் செய்துள்ளது. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை குறுக்கிட்டு கண்காணிக்க ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளது.

                                 ************

பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் பகுதியில் இருந்து வெறும் 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள  ரன்ஜித் சாகர் டேம் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.உயிரிழப்பு இல்லை.

                                 ************

ஆங்கில மொழியில் உள்ளவற்றை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் தானாகமொழிபெயர்க்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வடிவமைத்துள்ள, அகில இந்தியதொழில்நுட்பக் கல்விக் குழுவினருக்கு குடியரசுத் துணைத்தலை வர் திரு. வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

                                 ************

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 13 கல்வி நிறுவனங்கள் பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடங்கள் கற்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

                                 ************

சட்டப் படிப்புகளில் சேர இன்று முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

;