india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத தனித்தேர்வர்களாக விண்ணப் பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

                                    //////////////

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய் வில், 66.2 சதவீதம் பேரின் உடலில், கோவிட் வைரசை எதிர்க்கும் இம்யுனோகுளோபுலின்-ஜி எனப் படும்  நோயெதிர் உயிரி இருப்பது தெரியவந்துள்ளது.

                                    //////////////

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பயாலஜிக்கல் இ நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைஇல்லை என்று ஒன்றிய அரசு விளக் கம் அளித்துள்ளது.

                                    //////////////

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 78 ஆயிரத்து 838 கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள் ளது.

                                    //////////////

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் ஒன்றிய  அரசிடம் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

                                    //////////////

இராமேஸ்வரம் - பைசாபாத் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் இராமேஸ்வரத்திலிருந்து செப்டம்பர் 19-ஆம் தேதி முதல்  இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

                                    //////////////

மகாராஷ்டிராவில் மழை மற்றும் நிலச்சரிவால் ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

                                    //////////////

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் அனைத்துவகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதிவழங்கி, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

                                    //////////////

இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் வேவு  மென்பொருள் மூலம் இந்தியா உள்ளிட்டபல நாடுகளின் அரசியல் தலைவர்கள்,பத்திரிகையாளர்களை உளவு பார்த்தது குறித்து இஸ்ரேல் அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அந்த குழுமத்தின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர் என்று ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

                                    //////////////

செல்போன்களில் உளவு பார்க்கப்பட்டதற்கான சில தடயங்களை கண்டுபிடித்திருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

                                    //////////////

வேலூர்-சென்னை கடற்கரை இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

                                    //////////////

தமிழக காவல்துறையினருக்கு கட்டாயம் வார விடுமுறை வழங்கவேண்டும் என்று தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி சி.சைலேந் திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

                                    //////////////

ஒன்றிய  அரசு நடைமுறைப் படுத்திய புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக பேஸ்புக்நிறுவனம் தாக்கல் செய்த மனுவைஆகஸ்ட் 27 அன்று விசாரிக்கவுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

                                    //////////////

ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 52 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

                                    //////////////

எல்லைப் பிரச்சனை குறித்து இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 12-வது சுற்றுபேச்சு வார்த்தை சனிக்கிழமையன்று நடைபெற்றது.   கோக்ரா ஹைட்ஸ் மற்றும் ஹாட் ஸ்பிரிங் எனப்படும் இடங்களில் படைகளைத் திரும்பப்பெறுவது குறித்து இந்த ஆலோசனையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. 

                                    //////////////

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட டிஆர்பி தேர்வுகள் செப்டம்பர் முதல்நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

;