india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியைக் குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளன.

                                    *****************    

பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்வதில் இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரும், இலச்சினையும் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. 

                                    *****************    

இந்தியாவில் சுமார் 120 அணைகளின் பாதுகாப்பிற்கான திட்டத்தை மேற்கொள்ள  இந்தியாவும், உலக வங்கியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

                                    *****************    

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் ஜேம்ஸ் மெக்கான்வில் இந்தியா வந்துள்ளார்.

                                    *****************    

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ஆகஸ்ட் 12ஆம் தேதி, புவி கண்காணிப்புக்கான ஈஓஎஸ்-03 செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எஃப்10 ராக்கெட்  மூலம் விண்ணில் செலுத்துகிறது.

                                    *****************    

நடப்பு கல்வியாண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

                                    *****************    

அரசியலுக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதம் இருக்கிறார் என்று சாடியுள்ள  கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை , கர்நாடக அரசு இப்போராட்டத்தை கண்டுகொள்ளப்போவதில்லை. மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று  பெங்களுருவில் அளித்த பேட்டியில் மீண்டும் வீம்பாக கூறியுள்ளார். 

                                    *****************    

ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள  அயத்துல்லா சையீத் இப்ராகிம் ரைஸி இன்று பதவியேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், புதிய ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

;