india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

மே 1ஆம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்றும்  பிளஸ்- 2 பொதுத்தேர்வுக்கான தேதிஅறிவிக்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதல் களை வழங்க வேண்டும்  என்றும்பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள் ளது.

                                              *****************

வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

                                              *****************

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இணையத் தளத்திலும், செயலிகளிலும் தொடங்கியுள்ளது.

                                              *****************

தில்லியில் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

                                              *****************

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

                                              *****************

பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும் கல்லூரிக்கு நேரில் வரவழைக்கக்கூடாது என்று தமிழக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

                                              *****************
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் உள்ள தாக செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

                                              *****************

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு800 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.98 டிஎம்சி ஆக உள்ளது.

                                              *****************

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை  உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும்  கூடுதலாக 12 ஆயிரத்து 370ஆக்சிஜன் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் பொதுப் பணித்துறை அமைத்து வருகிறது.

                                              *****************

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இலங்கை கிரிக்கெட்முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான நுவான் ஜோய்ஸாவுக்கு ஆறு ஆண்டு தடை விதித்துள்ளது ஐசிசி.

                                              *****************

15 சதவீதத்துக்கும் மேல் கொரோனா பரவல் உள்ள 150 மாவட்டங்களிலும் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசிடம் மத்தியசுகாரத்துறை பரிந்துரை செய்துள் ளது.

                                              *****************

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து புதன்கிழமையன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடந்த இக்கூட்டத்தில்அமைச்சர்கள், முக்கிய துறைகளின் செயலாளர்கள், உயர்நிலைகுழு உறுப்பினர்கள், நிபுணர்கள் குழுஉறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

                                              *****************

மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ.400 இலிருந்து ரூ.300ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

                                              *****************

ஊரடங்கில் கடைகளை அடைக்க அரசு முடிவு எடுக்கும் போதும், கடை திறக்கும் நேரத்தை குறைக்கும் போதும் முன்னதாக வணிகர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு கருத்து கேட்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

                                              *****************

இங்கிலாந்து  தனது முதல் முக்கிய உதவியாக அனுப்பிய 100 வென்டிலேட்டர்கள், 95 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

                                              *****************

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிவளாகத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்

;