india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

இந்திய வங்கிகளில் 14 ஆயிரம்  கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.  

                                     **************

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றை மே 15 ஆம் தேதி வரை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

                                     **************

தமிழகம் முழுவதும் இன்று முதல்மறு அறிவிப்பு வரும் வரை வழக்கறிஞர்கள் சங்க அலுவல கங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அறைகளை மூட உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

                                     **************

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிரத்து செய்யப்படலாம் என்று ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில்  ஒருவரான டோஷிஹிரோ நிகாய் தெரிவித்துள்ளார்.

                                     **************

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில் 59 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சரிதா தங்கம் வென்றார். 

                                     **************

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

                                     **************

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பகுதியில் 2 சிசிடிவி கேமிராக்கள்வேலை செய்யவில்லை என நாகை சட்டமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் புகாரளித்துள் ளார். 

                                     **************

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைப்பது தொடர்பாக ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவோர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                     **************

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்  ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

                                     **************

5 மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி இதுவரை ரூ.1000 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

;