india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்....

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, அதுகுறித்த படக்காட்சி ஒன்றிய அரசின் ராஜ்யசபா தொலைக்காட்சியில் முன்னறிவிப்பின்றி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

                                 ***********

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்லபிரகாஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும்  மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

                                 ***********

செப்டம்பர் 12 அன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஆகஸ்ட் 11-14 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

                                 ***********

விரைவு சிறப்பு நீதிமன்றங்களு க்கான நிதியுதவி திட்டத்தை மேலும் 2 ஆண்டு தொடர ஒன்றிய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக்கல்விக்கான சமக்ரா சிக்சா திட்டத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

                                 ***********

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒருவரின் பெயர் பல தொகுதிகளில் இடம்பெறுவதை தடுக்க ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும். ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பான பரிந்துரையை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.

                                 ***********

பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கான திட்டத்தை மேலும் 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்க, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ளது.

                                 ***********

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய குழுவினரை, பிரதமர்நரேந்திரமோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று செங்கோட்டைக்கு அழைத்து பாராட்டு தெரிவிக்கவுள்ளார்.

                                 ***********

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவுபதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

                                 ***********

அந்தமான் தீவு பகுதிகளில் கோவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூன்று மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளன.

                                 ***********

நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் பங்கேற்கும் வகையில் இணைய தளம் ஒன்றை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.

;