india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை பிரதமர்  நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

                                            ***************** 

கயிறு திரிக்கும் ஆலைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் சார்ந்த வழக்கில் ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

                                            ***************** 

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையுடன், தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் இணைத்து அனுப்பும் புதிய திட்டத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

                                            ***************** 

சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசைப்பெற வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

                                            ***************** 

அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணி யாற்றாத உயர் சிறப்பு மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மாணவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் வசூலிக்கு மாறு மருத்துவக் கல்லூரி முதல்வர் களுக்கு மருத்துவக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

                                            ***************** 

ஆப்கானிஸ்தானிலிருந்து அநேகமாக அனைத்து இந்தியர்களையும் மீட்டுவிட்டோம் என்றும் அந்நாட்டின் உள்பகுதிகளில் இந்தியர்கள் சிலர் இருக்கக்கூடும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. எஞ்சியிருப்ப வர்களையும் விரைவில் மீட்டுவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

                                            ***************** 

ஆப்கனில் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அங்கு யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பது குறித்த எந்தத் தெளிவும் இதுவரையிலும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
 

;