india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

நாடு முழுவதிலுமிருந்து எஃகுஆலைகள் தற்போது வரை 1.43லட்சம் மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது என மத்தியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

                                      ****************

இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளது.

                                      ****************

கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வலியுறுத்தியுள்ளார்.

                                      ****************
புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிந்துள்ள நிலையில் மறுஉத்தரவு வரும்வரை மாணவர்களுக்கு தேர்வு நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

                                      ****************

சென்னையில் ஞாயிற்றுக்கிழமையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

                                      ****************

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான விருப்பப் பாடப்பிரிவில் தேசிய மாணவர் படை (என்சிசி) சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

                                      ****************

தமிழர் கலை, கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பொருட்களுடன் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட உள்ளது.

                                      ****************

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலைமலிவாக இருந்தாலும் வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

                                      ****************

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக ஏப்.25 அன்று100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

;