india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

நாடு முழுவதும் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை விரைவாக கொண்டு செல்லும் பணியில் விமானப் படையின் விமானங்கள் களமிறங்கியுள்ளது.

                            ***************

மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பூசி என்ன விலையில் கொடுக்கப்படுகிறதோ அதே விலையில் மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்தார்.

                            ***************

தமிழகத்தில் வார இறுதி நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்களும் மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

                            ***************

நாட்டில் கொரோனாவால் அவதியுறும் மக்களுக்கு படுக்கை வசதிகள் கூட இல்லாத நிலையில், அரசுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படுவது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சித் துள்ளார்.

                            ***************

மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப் பது விநியோகிப்பது தொடர்பான தடைகளை அகற்றும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

                            ***************

இன்னும் பத்தாண்டுகளில் அமெரிக்கா, கரியமில வாயுபரவலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை 52 சதவீதம் குறைத்துவிடும் என்றுஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

                            ***************

ஒடிசா மாநிலம் அங்குல் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர் லாரிகள் விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

                            ***************

ஆக்சிஜன் குழாய்கள், சிலிண்டர் அறைகளை ஏற்படுத்த ரூ.135கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

                            ***************

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜித்திகா, போலந்தின் நாதலியாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

                            ***************

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்த தகுதி சுற்றுபோட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் மே மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடக்கிறது.

                            ***************

மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

                            ***************

தமிழக கூட்டுறவு வங்கிகளில் ஜனவரி முதல் மார்ச் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

                            ***************

விதிகளை மீறி ஆம்னி பேருந்துகளில் மாற்றம் செய்தால் 6 மாதசிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

                            ***************

நாட்டில் உள்ள ஆக்சிஜன் தொழிற் சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். 

                            ***************

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த விசாரணையில் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் அமிகஸ் கியூரி பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே விலகியுள்ளார். 

;