india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

சென்னை உள்பட பல்வேறு ரயில் நிலையத்துக்குள்செல்ல புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முதியவர்கள், மாற்றுத்திற னாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

                                    *******************

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் வெளியிடப்படும் என யு.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

                                    *******************

உலக இளையோர் குத்துச் சண்டையில் 4 இந்திய வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

                                    *******************

குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தென்காசிமாவட்ட ஆட்சியர்  சமீரன் அறிவித்துள்ளார்.

                                    *******************

ஓசூர், தளி ஆகிய பகுதிகளில் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளதால் மொத்த விலையில் ரூ.1-க்கும் சில்லரை விலையில் ரூ.5-க்கும் தக்காளி விற்கப்படுகிறது. இதனால் பயிரிட்ட செலவு கூட கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரியுள்ளனர்.

                                    *******************

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மாளிகைமேட்டில் அகழாய்வு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் பழங்கால பானைஓடுகள், செம்பு காசுகள் கிடைத்துள்ளன. 

                                    *******************

மத்தியப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானதில் மூன்று தொழிலாளர் கள் உயிரிந்தனர். 

                                    *******************

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக, ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

                                    *******************

கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியப் பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டுமற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தி யுள்ளது.

                                    *******************

சென்னையில் விலை மாற்ற மின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

                                    *******************

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் குவிந்தனா்.

                                    *******************

தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிகட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                                    *******************

நெடுஞ்சாலைத் துறை மண்டல கணக்காளர்கள் பணிக்கான தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

;