india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும்தடுத்து நிறுத்தக்கூடாது என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாட்டில் அரசுக்கு தெரியாமல் பல மெட்ரிக் டன் ஆக்சிஜனைமத்திய அரசு எடுத்துச்சென்றுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. 

                                            ****************

ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலாஜிக்கல் இ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியில் முதல், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்துவிட்டது. புதிய தடுப்பூசியின் 3-வது கட்ட பரிசோதனையை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                            ****************

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தனது பங்களிப்பை நிறுத்திக் கொள்ள ரஷ்யா திட்ட மிட்டுள்ளது.

                                            ****************

திருச்சியில் இருந்து கொழும்புக்கு நேரடி வாராந்திர விமான சேவை அடுத்த மாதம் மே 2 ஆம் தேதி தொடங்குகிறது.

                                            ****************

காஷ்மீர் பள்ளத்தாக்கையும் லடாக்கையும் இணைக்கும் ஸோஜி லா கணவாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக புதன்கிழமையன்று முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

                                            ****************

2030-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்ற த்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பியயூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டுள் ளன.

                                            ****************

நீலகிரி மாவட்டத்தில் 50 சதவீத சுற்றுலா பயணிகளை தமிழக அரசு  அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                            ****************

மெசேஜிங் பயன்பாட்டின் புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையத்தின்  (சிசிஐ) உத்தரவை எதிர்த்து பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. இதனை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.

                                            ****************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.54 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1499 கன அடியிலிருந்து 1,200 கன அடியாக குறைந்தது.

                                            ****************

தில்லியில் கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

                                            ****************

ஒருவரை ஒருவர் தொடாமல் சமூக இடைவெளியுடன் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின்தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். 

                                            ****************

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி கொள்கை, ஏழைகளை பாதித்து, பணக்காரர்களைப் பாதுகாத்த ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு இணையானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

                                            ****************

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

;