india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அனுப் சந்திர பாண்டே திங்களன்று குடியரசுதுணை தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசினார். 

                                    *******************

கென்யா வெளியுறவு அமைச்சர் ரேய்ச்சல் ஒமாமோவுடன் இருநாட்டு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தியதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

                                    *******************

வந்தே பாரத் மிஷன் சிறப்பு விமானம் மூலம் 114 இந்தியர்கள் மலேசியாவிலிருந்து தில்லிக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

                                    *******************

நானோ யூரியா பயன்பாட்டால் விவசாயிகள் அதிகவருவாய் ஈட்ட முடியும் என்று ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். 

                                    *******************

ஒன்றிய அரசின் இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விளக்க மளித்துள்ளது.

                                    *******************

2030 ஆம் ஆண்டுக்குள்  கார்பன் உமிழ்வே இல்லாத செயல்பாட்டை அடையவேண்டும் என்ற உறுதியுடன் இந்திய ரயில்வே செயல்பட்டு வருவதாக ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

                                    *******************

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்துவது குறித்து வரும் பட்ஜெட்கூட்டத்தொடரில் முடிவு செய்யப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

                                    *******************

மேட்டூர் அணையின் நீர் நிலவரம்:  நீர்மட்டம்: 95.660 அடி. நீர் இருப்பு: 59.361 டி.எம்.சி, நீர் வரத்து: வினாடிக்கு 696 கன அடியாக உள்ளது.

                                    *******************

சிரியாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர்.

                                    *******************

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 90 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

                                    *******************

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 71 டாலராக உள்ளது.

                                    *******************

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். இதன்மூலம் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் குறைந்தது இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

;