india

img

தீக்கதிர் சில வரிச் செய்திகள்...

வாலாஜா அருகே கரிமண்டியில் மரக்கரி தயாரிக்கும் தொழிலில் கொத்தடிமை களாக ஈடுபடுத்தப்பட்டிருந்த 13 போ் மீட்கப்பட்டனா்.

                                          *****************

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                          *****************

மேட்டூர் அணையின் நீர்மட்டம்98.31 அடியாக குறைந்துள்ளது. 

                                          *****************

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,52, 879 பேருக்குகொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 33 லட்சத்து58 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள் ளது.

                                          *****************

சென்னையில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்துவதில் அலட்சியம் காட்டக் கூடாது என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

                                          *****************

சென்னை விமானநிலையத் துக்கு, துபையில் இருந்து வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.65.38 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

                                          *****************

நெடுங்காடு (தனி) சட்டப்பேர வைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஏ.மாரிமுத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                          *****************

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் சொத்து வரியில் சலுகை வழங்கப்படும் என்று தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

                                          *****************

மாதவராவ் வெற்றிபெற்றால் திருவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

;