india

img

பாகிஸ்தான் தாக்கினாலும் நாங்களே ஆயுதம் வாங்கிக் கொள்ள வேண்டுமா? மோடி அரசின் தடுப்பூசி கொள்கையை சாடிய கெஜ்ரிவால்....

புதுதில்லி;
முன்களப் பணியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கிய மத்திய அரசு, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசியை, அந்தந்த மாநிலங்களே தங்களின் சொந்த நிதியிலிருந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி விட்டது. 

தடுப்பூசிகளின் விலையை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்திற்கு உயர்த்திக்கொள்வதற்கும் அனுமதி அளித்தது.கொரோனா ஒரு தேசியப் பிரச்சனை என்ற நிலையில், மத்திய அரசு தனது பொறுப்பி லிருந்து விலகிக் கொண்டது, கொஞ்சமும் ஏற்க முடியாதது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.பல்வேறு மாநிலங்கள், வேறு வழியில்லாமல் தங்களின் கடுமையாக நிதிச்சுமைக்கு இடையிலும் கொரோனா தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்து வருகின்றன.இந்நிலையில், மத்திய அரசின் நிலைபாட்டை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.தடுப்பூசியை அந்தந்த மாநிலங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, நாளை பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல்நடத்தினால், அப்போதும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அவரவர்களே சுயமாக ஆயுதம் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லிவிடுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ‘உ.பி., தனக்கான ராணுவ டேங்குகளை தாங்களாக வாங்கிக்கொள்ள வேண்டுமா? தில்லி தனக்கான துப்பாக்கிகளை அதுவாகவே இறக்குமதி செய்து கொள்ள வேண்டுமா? என்று கேட்டுள் ளார்.

;