india

img

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு...

புதுதில்லி:
சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் குறைந்த அளவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அங்கு தினமும் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆனால் ஒரு நாள் தேவைக்கு மட்டுமே அங்கு தடுப்பூசி கைவசம் உள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தெலங்கானா மாநிலத்தில் கைவசம் உள்ள தடுப்பு மருந்துகள் 3 நாட்களுக்கு மட்டும் போதுமானதாக இருக்கும் என்றும், ஒடிசாவில் கைவசம் உள்ள தடுப்பு மருந்துகளும் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அந்த மாநில அரசு தரப்பில் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பு மருந்து குறைவாக உள்ளதாகவும், ஒருவேளை மருந்துகளை உடனடியாக அனுப்பாவிட்டால் மருந்து விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் ஹரியானா அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

;