india

img

பொதுத்துறைகளை விற்க எனது அரசு உறுதி பூண்டுள்ளது.. முதலீடு - சொத்து நிர்வாக கருத்தரங்கில் மோடி வாக்குமூலம்...

புதுதில்லி: 
நான்கு பொதுத்துறை நிறுவனங்களைத் தவிர, ஏனைய  அனைத்து பொதுத்துறை களையும் தனியார்மயமாக்கு வதற்கு தனது அரசுஉறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத் துறை (டிஐபிஏஎம்) நடத்திய காணொளி கருத்தரங்கில்தான் பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர், மேலும் பேசியிருப்பதாவது:பல்வேறு துறைகளில் தனியார் துறையை நுழைப்பதன் மூலம் நாட்டில் முதலீட்டைக் கொண்டு வர முயற்சிக்கிறோம். இதற்காக பட்ஜெட்டில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிவித்தோம். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அவை இயங்கி வருகின்றன. அவற்றை தனியார்மயமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பது அரசாங்கத்தின் கடமையாகும். மாறாக, நிறுவனங்களை அரசே சொந்தமாக வைத்து நடத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

தனியார் துறையினரால் சிறப்பாக செயல்பட்டு, நிறுவனங்களை பரிமளிக்கச் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் ஏராளமான வேலைவாய்ப்புகளை அந்த நிறுவனங்கள் உருவாக்கும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் கிடைக்கும் நிதியிலிருந்து பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். நான்கு முக்கியத் துறைகள் தவிர மற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எனது அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

;