india

img

அதிமுகவில் சசிகலா இல்லை... எடப்பாடி பழனிசாமி....

புதுjதில்லி:
தமிழக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது. இந்த சூழலில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக தில்லிக்கு சென்றார்.திங்கள் இரவு எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்திற்குச் சென்று, அவரைச் சந்தித்து பேசினார். செவ்வாய் காலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். 

இந்தச் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:- 

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய நூறு சதவீதம் வாய்ப்பு இல்லை. அதிமுகவில் சசிகலா இல்லை. சசிகலா ஆதரவாளர்களில் பலர் அதிமுகவில் உள்ளனர். சசிகலாவின் முகாமில் ஒரு சிலரே உள்ளனர். அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்திற்குப் பிறகுதான், சசிகலா கட்சியில் நுழைந்தார். அவர் உயிருடன் இருந்தபோது சசிகலா அதிமுகவில் இல்லை. ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் விசுவாசியாக சசிகலா இருந்தார்.

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன். அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் வருவதாக பிரதமர் தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை.இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

;