india

img

ரஷ்ய ஸ்புட்னிக் தடுப்பூசி..... மே 1-ல் இந்தியாவுக்கு கிடைக்கும்...

புதுதில்லி:
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்  மே 1ஆம் தேதி இந்தியாவுக்கு வந்து சேரும் என்று தகவல்வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில்  ஜனவரி 16 ஆம் தேதிமுதல்  தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

உள்நாட்டில்உற்பத்தியான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  ஆனால் நாட்டில்கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்  தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்தமத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்திருந்தது.  இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்  பயன்பாட்டுக்கு வருகிறது. ரஷ்யாவில் மட்டுமே இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 59 நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. கொரோனாவை தடுப்பதில்91.6 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசி வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்த தடுப்பூசியை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விநியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்புட்னிக்  தடுப்பூசியின் முதல் தொகுதி மே 1 ஆம்தேதி இந்தியாவுக்கு கிடைக்கும் என ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவர்  கிரில் டிமிட்ரிவ், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம்  தெரிவித்துள்ளார். 

;