india

img

ரூ. 16.5 கோடி ஊழல் குறித்து மவுனம் கலைக்க வேண்டும்... ராமர் கோயில் அறக்கட்டளைக்கு பிரதமரும், உச்சநீதிமன்றமுமே பொறுப்பு...

புதுதில்லி:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிலம் வாங்கியதில் ரூ. 16.5 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ள நிலையில், இதில், பிரதமரும், உச்சநீதிமன்றமும் தலையிட வேண் டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாஇதுதொடர்பாக கூறியிருப்பதாவது:மார்ச் 18 ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட நிலப் பத்திரத்தின்படி, ரூ. 2 கோடிக்கு வாங்கியநிலம் ‘சில நிமிடங்களுக்குள்’ ராமர் கோயில் அறக்கட்டளைக்கு18.5 கோடிக்கு விற்கப்பட்டுள் ளது.

இதேபோல ஒரு பாஜக தலைவர் பிப்ரவரி மாதம் அயோத்தியில் 890 மீட்டர் நிலத்தை ரூ. 20 லட்சத்திற்கு வாங்கி, தற்போது கோயில் அறக்கட்டளைக்கு ரூ. 2.5 கோடிக்கு விற்றுள்ளார். இதன் மூலம் அவர் 79 நாட்களில் 1250 சதவிகிதம் லாபம் ஈட்டியுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படியே ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது என்ற நிலையில், இந்த ஊழல் விவகாரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வருவது உச்சநீதிமன்றம்- அதன் நீதிபதிகள் மற்றும் அறக் கட்டளையை உருவாக்கிய பிரதமரின் பொறுப்பாகும்.

எனவே, உச்சநீதிமன்றமும் பிரதமரும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். முழு பரிவர்த்தனைகளையும் தனது கண்காணிப்பின் கீழ் தணிக்கை செய்து குற்றவாளிகளை உச்சநீதிமன்றம் தண்டிக்க வேண்டும்.எனினும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி அவர்களின் விருப் பத்திற்கே விட்டுவிடுகிறது.இது அறநெறி தொடர்பான விஷயம் மட்டுமல்ல. அரசியலமைப்பு சார்ந்த பிரச்சனையாகும். இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது பிரதமர் மற்றும் நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது.பகவான் ராமர் பெயரில் நன்கொடைகளை கொள்ளையடிக்கும் எவரையும் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.இவ்வாறு ரன்தீப் சிங் சுர் ஜேவாலா கூறியுள்ளார்.

;