india

img

அடக்குமுறைகளுக்கு அடிபணியாது செங்கொடி.... பாஜக வெறியாட்டத்தை கண்டித்து அகர்தலாவில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணி....

புதுதில்லி/அகர்தலா:
“எந்தவிதமான வன்முறைத் தாக்குதல்கள் மூலமோ, அடக்குமுறையின் மூலமோ செங்கொடி இயக்கத்தை ஒடுக்கிவிட முடியாது; இந்தியப் பாட்டாளி மக்களின் உதிரச் செங்கொடி, எத்தனை ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு பட்டொளி வீசிப் பறக்கும்” என்றமுழக்கத்துடன், திரிபுரா தலைநகர் அகர்தலாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் செங்கொடிஏந்தி மாபெரும் பேரணியை நடத்தினர்.

திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் ஆதரவோடு பாஜக குண்டர்கள், காவல்துறையின் உதவியோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் உட்பட ஏராளமான அலுவலகங்களை அடித்து நொறுக்கினர்; தீக்கிரையாக்கினர். செப்டம்பர் 8 அன்று நடத்தப்பட்ட இந்த கொடியவன்முறை வெறியாட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்இடதுமுன்னணி கட்சிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில் செப்டம்பர் 9 அன்றே, பாஜகவினரின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுமுன்னணி சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் செங்கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இப்பேரணியில் கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் தலைமையேற்று அணிவகுத்தனர்.ஏராளமான பெண்களும், இளைஞர்களும் செங்கொடி ஏந்தி அணி வகுத்தனர்.

புதுதில்லி
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஆர்எஸ்எஸ்/பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து தலைநகர் புதுதில்லியில் உள்ளநாடாளுமன்ற வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தில்லி மாநிலக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்டனஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பி.வி.ராகவலு, சுபாஷினி அலி, நிலோத்பால் பாசு,மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா முதலானவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள். இதுமட்டுமல்லாமல் காஸியாபாத்தில் நான்கு இடங்களிலும், நொய்டாவில் ஓரிடத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களி லும் ஆவேசமிக்க போராட்டங்கள் நடை பெற்றன. (ந.நி.)

;