india

img

நவீன மருத்துவ அறிவியல் பற்றி நேரடி விவாதத்திற்கு வரத் தயாரா? ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் சவால் ...

புதுதில்லி:
கொரோனா தொற்று உயிரிழப்புகளுக்கு நவீன அறிவியல் மருத்துவம் தான் காரணம் என்று ‘பதஞ்சலி’ நிறுவனத்தின் முதலாளியும், சாமியாருமான ராம்தேவ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

குறிப்பாக, நோயாளிகளுக்கு தரப்படும் ‘ரெம்டெசிவிர்’ போன்ற மருந்துகள்தான் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம்; நவீன அறிவியல் மருத்துவம் ஒரு முட்டாள்தனம் என்றும் கடுமையாக பேசியிருந்தார்.ராம்தேவின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனத்திற்கும் உள்ளானது.இதற்கிடையே இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகண்ட் கிளை, நவீன அறிவியல் மருத்துவம் பற்றி சாமியார் ராம்தேவ்நேரடி விவாதத்திற்கு வரத் தயாரா? என்றுசவால் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்தஅமைப்பின் தலைவர் டாக்டர் அஜய் கண்ணா ராம்தேவிற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். 

அதில், “பதஞ்சலி நிறுவனத்திலிருந்து தகுதி வாய்ந்த மற்றும் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட ஆயுர்வேத வல்லுநர் குழுவை அமையுங்கள். அலோபதி மருத்துவம்குறித்து நேருக்கு நேராக விவாதிக்கலாம். இந்த விவாதத்தை அனைத்து ஊடகங் களுக்கு முன் நடத்தலாம். பாபா ராம்தேவும், அவரது உதவியாளர் ஆச்சார்யாபாலகிருஷ்ணாவும்கூட இதில் பங்கேற்கலாம். ஆனால் பார்வையாளர்களாக மட்டுமே. ஏனென்றால், அவர்கள் தங்கள் சான்றிதழ்களை இதுவரை இந்திய மருத்துவ சங்கத்திற்கு அனுப்பவில்லை. இந்த ஆரோக்கியமான விவாதத்திற்கான தேதி மற்றும் நேரத்தை நீங்களே தீர்மானியுங்கள். இடத்தை மட்டும் நாங்கள் முடிவுசெய்கிறோம்” என்று டாக்டர் அஜய் கண்ணா கூறியுள்ளார்.

;