india

img

நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி...  பரபரப்பான தில்லி நகர பகுதிகள்..  

தில்லி 
மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் 10 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தொடக்கத்தில் தில்லி சிங்கு எல்லையில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் கடந்த வாரம் முதல் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாநில அரசின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உள்ளிட்ட பஞ்சாப் எம்.பி.க்கள் சிலருடன் திங்களன்று காலை தமது வீட்டில் இருந்து டிராக்டரில்  நாடாளுமன்றம் நோக்கிப் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ராகுலின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சுர்ஜிவாலா, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இருந்த பகுதி நோக்கி செல்ல முயன்றார். ஆனால், அவரை இடைமறித்த காவல்துறையினர் அவரையும் சில காங்கிரஸ் பிரமுகர்களையும் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.  

;