india

img

ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல்... நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துக.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்தல்....

புதுதில்லி:
ரபேல் ஊழல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இப்பிரச்சனையில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தும் விதத்தில்நாடாளுமன்றக் கூட்டுக்குழு உடனடியாக அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்திய விமானப்படைக்கு  ரபேல் போர் விமானங்களை விற்றதில்  முறைகேடு குறித்து பிரான்ஸ் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் இந்தியாவில் சூடுபிடிக்கும் பிரச்சனையாக மாறியுள்ளது.  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 72 ஆயிரம் கோடி ரூபாயில் 126 ரபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால்  அதனை கைவிட்டு  36 ரபேல் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று பிரதமர் மோடி வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் இந்த விமானங்களின் மொத்த மதிப்பு 59 ஆயிரம் கோடி ரூபாய் என்று இந்திய அரசு தெரிவித்தது. 

மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகும் 15 நாட்களுக்கு முன்னர், அதாவது2015 மார்ச் 26 அன்று  ரபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், தனது இந்திய தொழில்நுட்பப் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்து முதல்புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டிருப்ப தாக பிரான்சின் மீடியா பார்ட் இணைய இதழ் அம்பலப்படுத்தியது. இதற்கான ஆவணங்களை வெளியிட்டுள்ள மீடியா பார்ட், பிரதமர் மோடியின் அறிவிப்புஅப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே தெரியாது என்று கூறப்படும் நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது.

 2017-ல் டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து, டி.ஆர்.ஏ.எல். எனப்படும் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கட்டாயத்தின் பேரில் ரிலையன்சுடன் டசால்ட் நிறுவனம் இந்தஒப்பந்தத்தை செய்ததாகவும் டசால்ட் நிறுவனம் அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் பெரும்விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதுஅந்நிறுவன ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மீடியா பார்ட் தெரிவித்துள்ளது.மொத்தம் 169 மில்லியன் யூரோ முதலீட்டில் 159 மில்லியன் யூரோவை கொடுக்கும் டசால்ட் 49 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும்.  10 மில்லியன் யூரோவை மட்டும் முதலீடு செய்யும் ரிலைய்ன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்குகள் என்றும்டி.ஆர்.ஏ.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப் பதற்கான ஆதாரங்களையும் மீடியா பார்ட் வெளியிட்டு, வலுவான அரசியல் தலையீட்டால் ரிலையன்சுக்கு இந்த ஒப்பந்தம் சாத்தியமானதாக குறிப்பிட் டுள்ளது.

இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை, ரபேல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், தங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த ஹாலண்டே கூறியது குறிப்பிடத்தக்கது.அப்போதே இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்ப தாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதுதொடர்பான வழக்கில், ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் எந்த முறைகேடும்நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியது.ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய மதிப்பில் 8.8 கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததாக  மீடியாபார்ட் இதழில் வெளியான செய்திகள் மற்றும் பிரான்சை சேர்ந்த பொருளாதார குற்றங்களை விசாரித்து வரும் ஷெர்பா என்ற தொண்டு நிறுவனம் அளித்த புகார்ஆகியவற்றின் அடிப்படையில்  ரபேல் முறைகேடு விவகாரத்தில் விசாரணை நடத்த, ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் என்ற நீதிபதியை பிரான்ஸ் அரசு நிய
மித்துள்ளதாக பிரான்ஸ் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.பிரான்ஸ் அரசு விசாரணையை தொடங்கியுள்ளதால்  இந்தியாவில் இப்பிரச்சனை குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2016ஆம் ஆண்டு மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட பல கோடி டாலர் பெறுமானமுள்ள ரபேல் போர் விமானங்கள் உற்பத்திக்கான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் பொது விசாரணை சேவைமையத்தின் நீதிபதியால் புதியதோர் விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 14 அன்றுமேற்கண்ட பிரான்ஸ் பொது விசாரணைசேவைகள் அமைப்பின் நிதி விவகாரங்கள் பிரிவு மேற்கொண்ட முடிவின்படி, இருஅரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ரபேல் போர் விமான உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் குறித்து மீண்டும்முறையான விசாரணை துவக்கப் பட்டுள்ளது. இந்த ரபேல் பேரம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மேற்கண்ட விசாரணை அமைப்பின்இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களின்படி, ரபேல் போர் விமானங்களின் உற்பத்தி யாளரான டசால்ட் நிறுவனம் இந்தியாவின் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்நிறுவனத்துடன் 2015 மார்ச் 26 அன்று ஒருஉடன்பாட்டிற்கு வந்துள்ளது. இது,இந்த விவகாரத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தை நீக்கிவிட்டு புதிய உடன்பாட்டை பிரதமர் மோடி அறிவித்ததற்கு வெறும் 15 நாட்களுக்கு முன்புதான் நடந்திருக்கிறது. 

இது, முந்தைய ஒப்பந்தத்தை பிரதமர்மோடி முற்றிலும் மாற்றி அமைத்ததில் மிக மோசமான முறையில் ஊழலும்பெருமளவு பணம் கைமாறலும் நடந்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எழுப்பிவரும் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந் திருக்கிறது. எனவே ரபேல் பேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் பங்கு என்ன என்பது தொடர்பாகமுழுமையாக விசாரணை நடத்தவும் இந்தபேரத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணரவும் உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று 2018 செப்டம்பரில் எழுப்பிய அதே கோரிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மீண்டும் எழுப்பிகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கோரிக்கை
 ரபேல் போர் விமான முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெளிவாகி இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய அடையாளத்துடன் தொடர்புடையது என்பதால், ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் இதற்கு ஒரே வழி என்று தெரிவித்தார்.

ராகுல் கேள்வி
ரபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  

;