india

img

வாங்கியது 1.29 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்.... தனியார் மருத்துவமனைகள் வெறும் 22 லட்சம் டோஸ்களே செலுத்தின....

புதுதில்லி:
கடந்த மாதத்தில் தனியார் மருத்துவ மனைகள் அதிக அளவு கொரோனா தடுப்பூசிகளை வாங்கிய போதிலும், அதில் 17 சதவீதம்மட்டுமே பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.இதுகுறித்து கடந்த 4 ஆம் தேதியன்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மே மாதத்தில் நாடு முழுவதும் மொத்தம் 7.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றில் 1.85 கோடி டோஸ்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து, தனியார்மருத்துவமனைகள் 1.29 கோடி தடுப்பூசி டோஸ்களை பெற்றன. ஆனால் அதில் வெறும்22 லட்சம் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அதாவது 17 சதவீத தடுப்பூசி களை மட்டுமே தனியார்மருத்துவமனைகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப் படுகிறது. ஆனால் தனியார்மருத்துவமனைகளில்  கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்ட் டோஸ்விலை ரூ.780-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் ரூ.1,145-க்கும்,கோவாக்சின் ரூ.1,410-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவ மனைகள் 150 ரூபாயை சேவைக் கட்டணமாக வாங்குகின்றன.

;