india

img

65 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்....

புதுதில்லி:
டிசம்பர் மாதம் வரை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 65.5 கோடிகொரோனா தடுப்பூசிகளை பெற ஒன்றியஅரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை மாநிலஅரசுகளுக்கு வழங்க ஒன்றிய அரசு முடிவு
செய்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் 28.8 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளையும் பெற ஒன்றிய அரசு முடிவு செய்து ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.205-க்கும், கோவாக்சின் தடுப்பூசி ரூ.215-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

;