india

img

கதுவா சிறுமி பாலியல் வழக்கில் வழக்கறிஞர்கள் பணம் பெறவில்லை.... அம்பலமாகும் யூத் லீகின் மோசடிகள்...

புதுதில்லி:
கத்துவா சிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் யாரிடமிருந்தும் பணம் எதுவும் பெறவில்லை என்றும், பணம் வாங்கி வாதிடவேண்டிய வழக்கு அல்ல இது என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக ஆஜரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.எஸ்.பைன்ஸ் தெரி
வித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கோரி அரசு தரப்பு மேல்முறையீடு செய்ததோடு கூடுதலாக ஆசிபாவின் தந்தை தாக்கல் செய்த மனுவில் ஆர்.எஸ். பைன்ஸ் ஆஜரானார். ஆர்.எஸ்.பைன்ஸ் ஒரு பிரபலமான மனித உரிமை ஆர்வலர் ஆவார். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக,தான் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தனது அலுவலகத்தில் இருந்து கையொப்பத்துடன் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக ஒருபோதும் யாரிடமும் பணம் கேட்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வழக்கறிஞர் முபீன் பாருக்கிதான் கோப்புகளையும் வக்காலத்தையும் தன்னிடம் ஒப்படைத்தார் எனவும், முபீன் தனக்கு பணம் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஆனால், பைன்ஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டதாக யூத் லீக்கின் தேசிய பொதுச் செயலாளர் சி.கே.சுபைர் கூறியிருந்தார். அவர் கூறியது உண்மை அல்ல என்பது அம்பலமாகி உள்ளது.

இதுபோல் கத்துவா சிறுமி ஆசிபாவின் குடும்பத்திற்கு வழங்கியதாக கூறிய ரூ.5 லட்சத்தை யூத் லீக் செலுத்தவில்லை என்பதை நிரூபிக்கும் வங்கி ஆவணம் வெளியாகி உள்ளது. ஏப்ரல்2018 முதல் இந்த மாதம் வரை சிறுமியின் பெற்றோரின் வங்கி பரிமாற்ற விவரங்களை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த குடும்பத்தின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சம் இதுவரை எட்டவில்லை. 2018மே 16 அன்று கணக்கில் பணம்டெபாசிட் செய்யப்பட்டதாக யூத் லீக் கூறியது.யூத் லீகின் மோசடி அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு நபர் மூலமாக பணம் கைமாறப்பட்டது என்று இளைஞர் லீகின் தேசிய பொதுச் செயலாளர் சி.கே.சுபைர் கூறினார். ஆர்.எஸ். பைன்ஸ், முபீனிடமிருந்து மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பிலிருந்தும் பணம் பெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். ஆனால், யூத் லீக் தலைவர்கள் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முபீன் பாரூக்கிக்கு ரூ.9.35 லட்சம் கொடுத்ததாகக் கூறினர். இவை அனைத்தும் பொய் என்பதும், ஆசிபாவின் பெயரால் வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் யூத்லீக் தலைவர்களால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகிறது. 

கேரள முஸ்லிம் லீக் நடத்திய கோவிட் நிதி திரட்டல் மோசடி அவர்களுக்கு இடையிலான  மோதல் மூலம்அம்பலமாகி உள்ளது. 2002-ல் குஜராத் நிதி மோசடி குறித்து கேள்வி எழுப்பிய அன்றைய யூத் லீக் தலைவர் கே.டி.ஜலீல் (தற்போதைய அமைச்சர்) வெளியேற்றப்பட்டதுதான் அதற்கு எதிரான ஒரே நடவடிக்கை. சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், 1989-ல் பாகல்பூர் கலவர நிதி, 2004-ல் சுனாமி நிதி, பர்மாவில் ரோஹிங்கியா அகதிகளுக்கான பல நிதி ஆகியவை இதுபோன்ற விவாதத்துக்கு உள்ளானது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மட்டுமல்ல; இந்த கட்சியின் தியாகிகளுக்கு நிதி வசூலிப்பதிலும் துரோகம் இழைத்த வரலாறுலீக்கிற்கு உண்டு.

;