india

img

விவசாயிகள் பற்றி மோடியுடன் பேசிய கனடா பிரதமர்? டுவீட்டைத் தொடர்ந்து நேரடியாகவும் உரையாடல்....

புதுதில்லி:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முன்பு டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். 

“இந்திய விவசாயிகளின் போராட்டம் தொடர்வது தனக்கு கவலை அளிப்பதாகவும், அவர்கள் உரிமையைப் பாதுகாப்பதற்காக நடத்தும் அமைதியான போராட்டங்களுக்கு கனடா எப்போதும் துணை நிற்கும்” என்றும் ட்ரூடோ குறிப்பிட்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்த டுவீட் இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உள்விவகாரங்களில் இன்னொரு நாட்டுப் பிரதமர் கருத்து தெரிவிப்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசும், ஆளும் பாஜக தலைவர்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

ஆனால், கனடா பிரதமர் ட்ரூடோ, தற்போது நேரடியாகவே விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்தியப் பிரதமர் மோடியிடம் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக கனடா அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கொரோனா பரவலைத் தடுப்பது குறித்தும், மக்களின் சுகாதாரம் மற்றும்பொருளாதார பாதுகாப்பு குறித்தும் அவர்கள் பேசி உள்ளனர்.  இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு  மற்றும் இதற்கான உலக நாடுகளின் ஆதரவு குறித்து விவாதித்துள்ளனர். இந்த தடுப்பூசியை அளிப்பதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்.  கொரோனா தாக்கத்தில் இருந்து உலகைக் காக்க தங்கள் ஆதரவை அளிக்க இரு தலைவர்களும் முன் வந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், “இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையேயான பொதுவான பல விவகாரங்கள் குறித்தும் உலக அளவில் தாக்கத்தை உண்டாக்கும் வெப்பநிலை பாதிப்பு மற்றும் உலக வர்த்தக வலுவாக்கம், சர்வதேச விதிமுறைகள் உருவாக்குதல் குறித்தும் பேசி உள்ளனர். கனடா மற்றும் இந்தியாவில் நடைபெறும் பல ஜனநாயக மாறுதல்கள், சமீபத்தைய போராட்டங்கள், இந்த போராட்டங்களைத் தீர்க்க தேவையான வழிகள் ஆகியவை குறித்தும் தலைவர்கள் விவாதித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

;