india

img

ஆக்சிஜன் செறிவூட்டி விலை 54 சதவீதம் குறைந்தது...

புதுதில்லி:
ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலையில் ஒன்றியஅரசு உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இதனால் அவற்றின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ரசாயனம் - உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரசாயனம்-உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வர்த்தக விலை உச்ச வரம்பு, விநியோகஸ்தர் அளவிலான விலையில் 70 சதவீதம்இருக்க வேண்டும் என தேசிய மருந்து விலை ஆணையம் கடந்த 3 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இதையடுத்து 104 தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் 252 பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளின் அதிகபட்ச சில்லரை விலையை மாற்றியமைத்து மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர்.இவற்றில் 70 தயாரிப்புகள் மற்றும் பிராண்டின் விலை 54 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டி ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.54,337 வரை குறைந்துள்ளது. 58 பிராண்டுகள் 25 சதவீதம் வரை விலையைகுறைத்துள்ளன. 11 பிராண்டுகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளன. 252 தயாரிப்புகளில் 18 உள்நாட்டு நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை.ஒன்றிய அரசின் வர்த்தக விலை சீரமைப்பு மூலம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமற்ற லாபவரம்பை குறைத்தது, ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கும் நுகர்வோருக்கு சேமிப்பை உறுதி செய்துள்ளது.

 சிறிய ரக - 5LPM (80 தயாரிப்புகளில் 19 தயாரிப்புகளின் விலை குறைப்பு), சிறிய ரக- 10LPM 32 தயாரிப்புகளில் 7 விலை குறைப்பு,  நிலையான - 5LPM  46ல் 19 விலை குறைப்பு, நிலையான - 10 LPM 27ல் 13 விலை குறைப்பு, அனைத்து ரக ஆக்சிஜன் செறிவூட்டிகளின் மாற்றியமைக்கப்பட்ட விலை ஜூன் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் மாநில மருந்துகட்டுப்பாட்டாளர்களுடன் பகிரப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;